காய்கறிகளின் அற்புதம் ( Vegetables Wonder )

Posted on 06-08-2018 , by: Raghuram Shankar , in , , 0 Comments

காய்கறிகளில் உள்ள சத்துக்கள் –

வாழைத்தண்டு –

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும்.

வாழைப்பூ –

கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள் பி, சி உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும்.

பிட்ரூட் –

துத்தநாகம், கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு நல்லது.

உருளைக்கிழங்கு –

இதில் மாவுச் சத்து உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய் –

வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன. பசியைத் தூண்டும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

சேப்பங்கிழங்கு –

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளன. எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும்.

வெண்டைக்காய் –

ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் வைட்டமின் பி, சி உள்ளன. மூளை வளர்ச்சிக்கு உதவும்.

கேரட் –

வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோயை குணப்படுத்தவல்லது.

கத்தரிக்காய் –

பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

பீன்ஸ் –

புரதச் சத்து, கால்சியம், இரும்பு மற்ரும் வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சி ஏற்படும்.

புடலங்காய் –

வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் உள்ளன. எலும்பு உறுதிபெறும்.

அவரைக்காய் –

புரத சத்து, நார்ச்சத்து உள்ளன. உடல் வளர்ச்சி பெறும். மலச்சிக்கல் தீரும்.

கொத்தவரங்காய் –

இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன. நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

கோவக்காய் –

வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகியன உள்ளன. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

செளசெள –

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி உள்ளன. எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது.

முள்ளங்கி –

பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, வைட்டமின் பி சிறிதளவு உள்ளன. உடல் சோர்வைப் போக்கும்.

தக்காளி –

வைட்டமின் சி, ஏ, பி மற்றும் கால்சியம், இரும்பு உள்ளன. உடலுக்கு உறுதி மற்றும் ரத்த விருத்திக்கும் உதவும்.

பூசணிக்காய் –

வைட்டமின் ஏ, பி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியன உள்ளன. நீர்ச்சத்து அதிகமாகும். ரத்தத்தை விருத்தி செய்யும்.

கருணைக் கிழங்கு –

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி உள்ளன. வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாது.

வெள்ளிக்காய் –

ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியன உள்ளன. வெள்ளரிப்பிஞ்சி தாகத்தைத் தணிக்கும். உணவு எளிதில் ஜீரணமாகும்.

முருங்கைக்காய் –

வைட்டமின் சி, ஏ, பி மற்றும் பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை உள்ளன. பெண்களின் உதிரப் போக்கை கட்டுப்படுத்தும். விந்து இழத்தல் குறையைப் போக்கும்.

குடை மிளகாய் –

வைட்டமின் சி, ஏ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியன உள்ளன. அஜீரணம் குணமாகும்.

சுரைக்காய் –

பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. பொட்டாசியம் குறைவினால் உடல் சோர்வு ஏற்படுவதை தடுக்கும்.

சுண்டைக்காய் –

புரதச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் உறுதிபடவும், ரத்த சோகையைப் போக்கும்.

நூல்கோல் –

நார்ப்பொருள், மாவுப்பொருள், வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்க நார்ச்சத்து உதவும்.

வெங்காயம் –

பெரியது – இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. சிறியது – இரும்புச் சத்து, கால்சியம் உள்ளது. கொழுப்பைக் கரைக்க உதவும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment