Vazhai Elai

Posted on 28-07-2018 , by: Raghuram Shankar , in , 0 Comments

வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா

வாழை நமது கலாச்சாரத்திலிலும் நமது உணவு முறைகளிலும் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன.

வாழையின் ஒவ்வொரு பாகமும் மனிதரின், பொதுவாக தமிழரின் மிக முக்கியமான பாகமாக இருக்கின்றன.வாழையின் ஒவ்வொரு பகுதியிம் ஒவ்வொரு வித தேவைகளுக்கு உதவுகிறது.

உதாரணமாக வாழை தண்டு, வாழை பழம், வாழை காய் முதலியவை உணவாக பயன் படுகிறது.வாழைத்தண்டில் மேல் பட்டை தீக்காயங்களுக்கும் மேலும் சில மருத்துவம் சார்ந்த மருந்து தயாரிக்க பயன் படுகிறது.

வாழை இலையின் மகத்துவம்:

வாழை இல்லை நாம் உணவு உண்ண பயன் படுகிறது. அது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை நமது முன்னோர்கள் கண்டறிந்தனர்.

இந்த நல்ல பழக்கத்தை, நாம் பயன் படுத்த நமது முன்னோர்கள் அவற்றை நமது உணவு கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகவே அதை வைத்திருந்தனர்.

நமது கலாச்சாரத்தில் வாழை இல்லை பயன்படுத்தாத விருந்தே இல்லை என கூறலாம்.

கோவில் திருவிழா ஆகட்டும், திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆகட்டும் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும்.
இவற்றை பயன் படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

வாழை இலையின் மருத்துவ பலன் :
வாழை இலையில் உண்பதால் நமக்கு ஏற்படும் வயிற்று புண் ஆறும்.

வாழை இலையில் உள்ள கிளோரோபில் (Chlorophyll) பல நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது.
இதனால் நமது உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.

தொடர்ந்து நாம் வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், தோல் சார்ந்த நோய்கள் மறைந்து நமக்கு பளபளப்பான தோல் கிடைக்கும்.

நமது முடியை பல காலம் கருப்பாக வைத்து இளநரையை மறைக்கும் ஆற்றல் கொண்டது.

மறுசுழற்சி :
அது மட்டும் இல்லாமல் வாழை இலை, நாம் உண்ண பயன் படுத்திய பின் ஆடு, மாடு போன்ற விலங்கிற்கு உணவாய் மாறுகிறது.

இது ஒரு சிறந்த சுற்றுச்சூழல் மறுசுழற்சியாக பார்க்கப் படுகிறது.

காகித இலை அறிமுகம்:
இப்படி அதி சிறந்த வாழைக்கு மாற்றாக தற்போது ஒரு பொருள் சந்தைகளில் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

அது வாழை இலை போல செயற்கையாக வடிவமைக்கப் பட்ட காகித இலை.

வாழை இலை போல அச்சி அசலாக பச்சை நிறத்திலேயே வடிவமைக்க படுகிறது.

தண்ணீர் அதிகம் சேர்க்கப் படும் நமது பாரம்பரிய உணவை காகிதத்தில் எப்படி போட்டு உண்ண முடியும்?
காகிதம் கிழிந்து விடாதா எனப் பார்த்தால், அந்த காகிதங்களின் மேல் பரப்பில் பிளாஸ்டிக் பூசப் பட்டிருப்பதை அறியலாம்.

முதலில் திருமணம் போன்ற விழாக்களில் மட்டுமே பயன் பாட்டிற்கு வந்த இவ்வகை பிளாஸ்டிக் இலைகள் தற்போது உணவு விடுதிகளிலும் வரத் தொடங்கி விட்டது.

வீடுகளில் கூட இவ்வகை பிளாஸ்டிக் இலைகள் மெதுவாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன.
இவ்வகை இலைகள் சந்தையில் வாழை இலைகளை விட அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பது இதற்கு ஒரு பெரும் காரணம் ஆகும்.

மேலும் வாழை இலையில் ஏதேனும் ஒரு உணவை கட்டி எடுக்கையில் அவை கிழிய வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த பிளாஸ்டிக் இலைகளில் அவ்வித பிரச்சனைகள் இல்லை.

அதனால் இவை வாழை இலைகளுக்கு மாற்றாக மாறி வருகின்றன.

பேப்பர் இலையின் தீமைகள்:
பிளாஸ்டிக் இலைகளில் வெளி நாட்டினரின் உணவு வகைகள் போல், சூடு குறைந்த, நீர் அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடும் வரை இஃது பெரிய பிரச்சனை இல்லை தான் .

ஆனால் நமது உணவுகள் சூடாகவும், அதிக நீர் கொண்டும் தயாரிக்கப் படுகின்றன.

இம்மாதிரியான உணவை நாம் பிளாஸ்டிக் இலையில் போட்டு உண்ணுவது நமது உடலுக்கு நாளடைவில் மிகுந்த பிரச்சனை தரும் செயலாகும் .

உடல் பாதிப்பு :
நாம் வாழை இலை மூலம் சாப்பிட்டால் வரும் நம்மைகள் அனைத்தும் பிளாஸ்டிக் இலைகளில் சாப்பிட்டால் கிடைக்காது என்பது மட்டும் அல்ல பிளாஸ்டிக் இலைகளில் தொடர்ந்து சாப்பிட்டால் அது நமக்கு பல உபாதைகளையும் கொடுக்கும். மேலும் இதன் பயன்பாட்டிற்கு பின் அவை அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளாக மாறுமே அன்றி வாழை இல்லை போல் சுற்றுப்புற மறுசுழற்சி போன்ற உன்னத செயல்களுக்கு இது பயன்படாது.

எனவே முடிந்தவரை நாம் நமது முன்னோர்கள் நமக்கு அளித்த வரமான வாழை இலைகளை புறந்தள்ளாமல் பயன்படுத்தி பயன் பெறுவோம்.

நமது பாரம்பரியத்திற்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்போம்

தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை
1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad)
5. பருப்பு கூட்டு (Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்பல்யா (Fogath)
8. பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath)
9. சித்ரண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. கொரிப்பு (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. சாதம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. உளுந்து வடை (Black Gram Paste Fired Cake)
18. கத்திரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. இனிப்பும் புளிப்பும் கலந்த கூட்டு (Sweet And Sour Gravy)
20. காய்கறி பொரியல்(Vegetable Fry)
21. காய்கறி அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. வடைகறி (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் போளி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. இஞ்சி துவையல் (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk )

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment