முள்ளங்கி சூப் ( Radish Soup )

Posted on 13-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

தினமும் முள்ளங்கி சூப் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் –

நாம் தினமும் உண்ணும் காய் வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே நாம் முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் அதற்கு எற்ப மிக அதிக மருத்துவ குணம் உடயைது முள்ளங்கி.

முள்ளங்கி உடலில் உள்ள அசுத்தமான கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முள்ளங்கியை உணவுடன் சேர்த்து உண்பதிற்கு பதிலாக அதனை சூப் செய்து குடித்தால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டு – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிது

செய்முறை :

முள்ளங்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு குக்கரில் முள்ளங்கி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில் மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் வந்தவுடன் குக்கர் மூடியை திறந்து மத்து வைத்து வேகவைத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.

ஒரு வடிகட்டில் வைத்து சூப்பை தனியாக வடிகட்டி கொண்ட பின் அடுப்பில் வடிகட்டிய சூப்பை வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக மிளகுதூள், கொத்தமல்லி தழை தூவவும்.

இப்பொழுது சத்தான முள்ளங்கி சூப் ரெடி.

பலன்கள் :

முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிப்பதால் உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

முள்ளங்கி கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முள்ளங்கி வகைகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

வெள்ளை முள்ளங்கி மட்டுமே அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.

முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினமும் உண்பது மிகவும் நல்லது.

முள்ளங்கிப் பிஞ்சு சாறு பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிப்பது நல்லது.

பெரியவர்களுக்கு சிறுநீர்ப் பாதையில் எற்படும் பிரச்சினை, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் போது முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்க முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

 

Leave a comment