பாட்டி வைத்தியம் 7 ( Patti Vaidhyam 7 )

Posted on 11-08-2018 , by: Raghuram Shankar , in , , , , 0 Comments

பாட்டி வைத்தியம் –

தலைவலிக்கு –

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

கைநடுக்கம் தீர –

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

சூட்டுக்குத் தைலம் –

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

உடல் எடை கூட –

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

பசி உண்டாக –

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

இரத்த விருத்தி –

காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் சுத்த தேன் கலந்து பருகிவர புது இரத்தம் உண்டாகும்

பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இரத்தம் ஊறும்

தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்

சம அளவு பொன்னாங்கண்ணி கீரை,கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து,அதில் நெல்லியளவு எடுத்து பாலில் தினசரி இரவு அருந்தி வந்தால் இரத்த சோகை குறையும்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

உடல் குளிர்ச்சி பெற –

நெருஞ்சில் விதை , கோதுமை , கொத்த மல்லி , சுக்கு, ஏலம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து சர்க்கரை சேர்த்து அருந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் .வள்ளைக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும் அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெரும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க –

துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு காலை/மாலை 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வசம்பைக் கரியாக்கி தூளாக்கி துணியில் சலித்து, குளித்தவுடன் குழந்தையின் கால்களின் அடியில், தொப்புளை சுற்றி தடவிவர நோய் அணுகாது.

முகப்பரு குறைய –

சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை தடவினால் முகப்பரு குறையும்.

வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

மூட்டு வலி –

முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.

செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.

வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

தொப்பையை குறைக்க –

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வந்தால் இவ்வாறு 40 நாட்கள் செய்ய வேண்டும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment