பஞ்ச கற்பம் ( Panja Karpam )

Posted on 04-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

பஞ்ச கற்பம்

பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும்

கடுக்காத்தோல்,
விதை நீக்கிய நெல்லி வத்தல்,
வெண்மிளகு,
கஸ்தூரி மஞ்சள்,
வேப்பம் பருப்பு

ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர். அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊறவைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார். இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும் நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும். உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்

நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும்.

சிறு வயதில் இருந்தே பயன் 15 நாட்களுக்கொரு முறைபயன் படுத்தி வந்தால் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வறட்சி, வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கு பஞ்சகற்பம் நல்ல மருந்து. பஞ்சகற்பத்தை பசும்பாலில் ஊறவைத்து நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் கழித்து தலை முதல் கால் வரை லேசாக அப்பி தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.

தலையில் பொடுகு நீங்கவும் நல்ல மருந்தாக அமைகின்றது.

பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment