பற்பசை வேண்டாம் ( No To Toothpaste )

Posted on 30-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

Toothpaste (பற்பசை)
பயன்படுத்துபவரா நீங்கள்?
இந்த பதிவு உங்களுக்குத்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் மக்கள் அணைவரும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங்குச்சி, கரித்தூள், சாம்பல், கடுக்காய்த்தூள், போன்றவற்றில் தான் பல் துலக்கி வந்தனர், அப்போது நம் பற்களும் ஆரோக்கியமாகவே இருந்தது,
நவீனமயம் எனும் பெயரில் பல்பொடிக்கு மாற்றாக “பற்பசை”(Toothpaste) வந்த பின்புதான் மக்களின் பிரச்சனைகளும் ஆரம்பம் ஆனது எனலாம், அத்தோடு கடுக்காய்பொடி, சாம்பல், கரித்தூள் ஆகியவற்றின் உபயோகம் அடியோடு நின்று போனது,

காலம் செல்லச்செல்ல நுரை வந்தால் தான் அது நல்ல “பற்பசை”(Toothpaste) , நுரை வந்தால் தான் கிருமிகள் அழியும், என்ற பிம்பத்தை உருவாக்கி, brush இல் பல் துலக்கினால் தான் நுரை வரும் என்று சொல்லி அனைவரையும் brush உபயோக்கிக்கும்படி பழக்கப்படுத்தினார்கள், அத்தோடு வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங்குச்சி போன்றவற்றின் உபயோகமும் மறைந்துவிட்டது.

வியாபார போட்டி காரணமாக, Toothpasteஇல் நிறம், சுவை, வாசனை போன்றவற்றையும் போட்டிபோட்டுக் கொண்டு கலக்க ஆரம்பித்தார்கள்,
இதற்காக பல இரசாயனங்களை சேர்த்தனர்.
நீங்கள் உபயோகிக்கும் Toothpasteகளில் கலக்கப்படும்
ஸல்பேட் (Sulphate),
ப்புலுரைடு (Fluoride),
நிறமூட்டி(coloring agent)
இனிப்பூட்டி (sweetener),
நுரைப்பான்(foaming agent)
நிலைப்படுத்தி (stabilizer)
மற்றும் பதனப்பொருள் (Preservative),
ஆகிய இராசாயண கலவைகள்
புற்றுநோய் (Cancer) போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

பெருப்பாலான பற்பசைகளில்
Fluoride (ஃபுளூரைடு)

Triclosan (ட்ரைகுளோசன்)

Sodium lauryl sulfate
(சோடியம் லாரில் சல்ஃபேட்)

Sodium benzoate
(சோடியம் பென்ஸொயட்)

Methyl paraben(மெத்தில் பெராபென்)

Propylene glycol(ப்ரொபைலின் கிலைகால்)

Xanthan gum (ஷாந்தன்கம்)

போன்ற பல இரசாயன பொருட்கள் சேர்கப்படுகிறது,
இதனால் பல வகையான பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட இரசாயணங்களின் உபயோகம் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பார்ப்போம்.

Fluoride (ஃபுளூரைடு)
இது கலக்கப்படாத பற்பசைகளே இல்லை எனலாம், fluoride பற்களின் எனாமல் மற்றும் ஈறுகளை பாதுகாக்கிறது,
ஆனால், நம் எழும்பு மண்டலத்தை நேரடியாகவே பாதிக்கிறது, இரத்தத்தில் உள்ள சத்துக்களை எழும்புகள் எடுத்துக்கொள்வதை தடுக்கிறது, இதனால் எழும்பு பலகீனம் ஆகிவிடுகிறது, இந்த fluoride நிலத்தடி நீரிலும் இருக்கும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கும் நிலத்தடி நீரில் fluorideஇன் அளவு மிகுந்து காணப்படுகிறது, இந்த நீரை உபயோகிப்பதன் காரணமாக அந்த மாவட்ட மக்களில் பலருக்கு எழும்பு சார்ந்த பிரச்சினை அதிகம் காணப்படுகிறது.
Fluoride கலந்த பற்பசை அதிகம் உபயோகிப்பவர்கள் பலருக்கு சீக்கிரமே மூட்டுவலி வந்துவிடுவதை காணமுடிகிறது.

Triclosan (ட்ரைகுளோசன்)
இது பாக்டீரியாவிடமிருந்து காக்கும்,

ஆனால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட மற்றும் எடை குறைந்த குழந்தைள் பிறக்க காரணமாய் இருக்கிறது.

Sodium lauryl sulfate
(சோடியம் லாரில் சல்ஃபேட்)
இது பற்பசையில் நுரை ஏற்பட, மற்றும் வாய் துர்ற்றத்தை போக்க பயன்படுத்தப்படுகிறது,

இது காலப்போக்கில் சுவை நரம்புகளை பாதிக்கச்செய்து ஈறுகளில் எரிச்சல் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Sodium benzoate
(சோடியம் பென்ஸொயட்)
பாக்டீரியாக்களை அழிப்பதற்காக இந்த இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது,
இது நாளடைவில் தலைவலி, மூச்சுத்திணறல், மலம் மற்றும் சிறுநீரில் இரத்தம் கசிதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Methyl paraben(மெத்தில் பெராபென்)
பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும்,
இது பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Propylene glycol(ப்ரொபைலின் கிளைக்கால்)
இந்த பொருள் பற்பசையில் இனிப்புச்சுவை கூட்டுவதற்காக சேர்க்கப்படும்,
இதனால் கர்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அறியப்படுகிறது.

Xanthan gum (ஷாந்தன்கம்)
பற்பசையின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டி சேர்க்கப்படும் இந்த இரசாயணம் உங்கள் உடலில் நுரையீரல் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் எரிச்சலை உண்டாக்கக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு சொல்லப்பட்ட பக்கவிளைவுகளின் எண்ணிக்கை கொஞ்சம் தான், அந்த இரசாயனங்களை பற்றி கூகுளில்(google) தேடிப்பார்த்தால் இன்னும் ஏராளமான பக்கவிளைவுகள் பற்றி இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் எல்லா பற்பசைகளிலும் மேலே சொல்லப்பட்ட இரசாயன பொருட்களில் சில கண்டிப்பாக இருக்கும்.

இத்தனை பாதிப்புகள் உண்டு என்பது தெரியாமலே பலரும் கலர் கலராக பற்பசை வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்,

இனியேனும் பற்பசை உபயோகத்தை நிறுத்திவிட்டு பற்பொடி உபயோகிப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால், இதற்கு மேலும் எந்த பக்கவிளைவும் இல்லாமல் தவிர்த்துவிடலாம்.

இன்று பல நல்ல நல்ல மூலிகை பல்பொடிகள் கடைகளில் கிடைக்கின்றன,
கடுக்காய் போடியில் சிறிது உப்பு கலந்து பல் துலக்கினால் பற்கள் பலப்படும்,
வேப்பங்குச்சியில் பல் துலக்கிவந்தால் சர்க்கரை அளவு சமன்படுவதோடு மட்டுமல்லாமல் இறைப்பை சுத்தமாகும்.

இப்படி பல நல்ல வழிமுறைகள் உண்டு, இதை நீங்கள் கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்.

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment