Nagathali

Posted on 24-07-2018 , by: Raghuram Shankar , in , , 0 Comments

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது…. இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்….

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது….

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ….

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது….

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment