வெந்தயக் கீரை ( Methi Leaves )

Posted on 24-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , , 0 Comments

வெந்தயக் கீரை –

வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்து வந்தால் , வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம், சீதக் கழிச்சல் போன்ற பிரச்னைகளைப் போக்கும்.

இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், ரத்தச் சோகை வராமல் தடுக்கும். வயிற்றுப் புண் உள்ளவர்கள் அரை மி.லி அளவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து குடித்து வர , விரைவில் குணமாகும். கண் பார்வைத் திறனை மேம்படுத்தும். உடலுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும்.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸி டன்ட், வயதாவதால் ஏற்படும் தோற்றத்தின் முதிர்ச்சியை தடுக்கும். கோழிமுட்டை, தேங்காய்ப் பால், நெய் இவற்றுடன் வெந்தயக் கீரையை சேர்த்துச் சாப்பிட்டால், இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

வெந்தயக் கீரையை அரைத்து, வெல்லம் சேர்த்து லேகியமாகச் செய்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட வேண்டும்., இதனால் கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள் குண மாகும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் கள் உணவில் வெந்தயக் கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும். மாதவிடாய் வலி, பிரச்னைகளைப் போக்கும். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு, அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

கீரை, சர்க்கரை நோய் அளவை குறைக்கும்.. இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் விகிதம் குறைகிறது. கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும்.

முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சுருக்கங்கள் மறைவதற்கு தினமும் கீரைச் சாற்றைத் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர, முகம் பொலிவு பெறும். பருக்கள் நீங்கும்.

கீரையின் இலைகளை அரைத்து, பேஸ்ட் செய்து, உச்சந்தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர, முடி நன்கு வளரும். முடி உதிர்வது குறையும்.

கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள் குறையும். கண்பார்வை அதிகரிக்கும், தொடர்ந்து கீரையை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

உலர்ந்த திராட்சை பத்து , சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இதனுடன் வெந்தய கீரையை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் இரும்பல் குணமாகும்.

வாயு கோளாறுக்கு சிறிது ஓமம் எடுத்து வெந்தய கீரையுடன் சாப்பிட்டால் வாயு கோளாறு குணமாகும்.. கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி காலை , மாலை சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.

தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து குளித்தாலும் சரியாகும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment