கலீரல் நோய் ( Liver Disease )

Posted on 15-08-2018 , by: Raghuram Shankar , in , , 0 Comments

உங்கள் கல்லீரல் –

கல்லீரல் நோய்களில் பொதுவாக 4 வகைகள் உள்ளன.

ஃபேட்டி லிவர் –

கொழுப்பு படிவதன் காரணமாக கல்லீரல் பெருத்து விடும். இப்படி கொழுப்பு படிந்த கல்லீரலையே ஃபேட்டி லிவர் என்கிறோம்.

லிவர் ஃபைப்ரோசிஸ் –

ஃபேட்டி லிவருக்கு அடுத்த கட்டம் இது. இந்நிலையில் கல்லீரலுக்கு வடு ஏற்படுத்துவது போல நார்த்திசுக்கள் வளரும். கல்லீரல் செல்களின் காயம் இன்னும் அதிகமாகும்.

சிரோசிஸ் –

நார்த்திசுக்கள் அதிகமாகும் போது கல்லீரல் இறுகும். அதிகமாகக் கெட்டியாகும் நிலைதான் சிரோசிஸ். இதன் பிறகு கல்லீரல் முழு செயல்திறனையும் இழந்துவிடும். கல்லீரல் 75 சதவிகித திறனை இழந்துவிட்டாலே, உயிருக்கு ஆபத்துதான்.

கல்லீரல் கேன்சர் –

பெயர் சொன்னாலே விளங்கும் இந்நிலை பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை.கல்லீரலில் கொழுப்பு படிதல் நோய் (ஃபேட்டி லிவர்) பற்றி முதலில் அறிவோம். கல்லீரலின் செல்களில் கொழுப்பு படிந்த உடனே, அதன் ஆரோக்கியம் குன்றத் தொடங்குகிறது. இதிலும் இரு வகைகள் உள்ளன.

அதிக அளவு மது குடித்தல் காரணமாக ஏற்படுவது.
ஆல்கஹால் சாராத மற்ற காரணங்களால் ஏற்படுவது.

இரண்டாவது வகையை ‘நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ்’ (NAFLD) எனக் குறிப்பிடுவோம். அதிக எடை கொண்டவர்களும், நீரிழிவு கொண்ட ஆண்/பெண்களுக்கும் இது பொதுவாகக் காணப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், இப்பிரச்னை இதன் அடுத்த கட்டங்களான சிரோசிஸ், லிவர் கேன்சர் போன்ற சீரியஸான நிலைகளை அடையும் அபாயம் உண்டு.ஆரோக்கியமான கல்லீரலில் பொதுவாக எந்தக் கொழுப்பும் காணப்படுவதில்லை.

அல்லது மிகக்குறைந்த அளவு கொழுப்பு காணப்படலாம். சில நேரங்களில் ட்ரைக்ளிசரைட்ஸ் எனும் கொழுப்பு மூலக்கூறுகள் கல்லீரல் செல்களில் சேகரமாகத் தொடங்கும். ஓரளவு கொழுப்பு என்றால் எந்தப் பிரச்னையும் இல்லை. இதுவே அளவு அதிகமாகும்போது, கொழுப்பு படிந்த கல்லீரல் நோயாக மாறிவிடுகிறது. சமீபகாலமாக ஃபேட்டி லிவர் என்கிற இந்நோய் மிக அதிகமாகி வருகிறது.

மதுவின் தாக்கம் காரணமாக இந்நோய் இந்தியாவில் ஏராளமானோருக்குப் பரவி, லிவர் சிரோசிஸ் பயங்கரத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. மது அருந்துவோரில் மூன்றில் ஒருவருக்கு ஃபேட்டி லிவர் தாக்குதலின் ஏதோ ஒரு நிலை நிச்சயம் இருக்கிறது. இவர்களில் இளம் வயதினரே மிக அதிகம். உடற்பயிற்சி இல்லாததும், முறையற்ற உணவுமுறையும் இச்சிக்கலை இன்னும் தீவிரம் ஆக்குகிறது.

ஃபேட்டி லிவர் நிலை முற்றும் போது, கல்லீரல் அழற்சி ( Inflammation) ஏற்படுகிறது. இதோடு நார்த்திசு வளர்வதால், அதிவேகமாக அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து சிரோசிஸ் அபாயத்தில் கொண்டு போய் விடும். இதற்கு மருந்து, மாத்திரைகள் எல்லாம் பயன் தராது.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாகி விடும். ஃபேட்டி லிவர் ஏற்பட்டு, அதன் பிறகும் முறையான சிகிச்சைகளும் வாழ்க்கை முறை மாற்றங்களும் செய்யாமல் இருந்தால் சிரோசிஸ் வருவது உறுதி. இவர்களில் சிலர் மட்டும் சிரோசிஸில் இருந்து தப்பிக்கக்கூடும். ஆனால், இவர்களுக்காக கல்லீரல் கேன்சர் காத்திருக்கும்!

ஃபேட்டி லிவர் அறிகுறிகள்.

கல்லீரலில் கொழுப்பு படிவதை தொடக்க நிலையில் இருக்கும்போது அறிகுறிகள் மூலம் அறிய முடியாது. பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்தல், அடிக்கடி வைரல் தொற்று நோய்களுக்கு ஆட்படுதல் ஆகியவை ஏற்படக்கூடும். அறியப்படாமலே விடப்பட்டால், கல்லீரல் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி விடும்.

ஃபேட்டி லிவர் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், இந்தியாவில் இம்மூன்று காரணங்களே பிரதானம்.

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.

அதிக எடை / பருமனாக இருத்தல் – இது நீரிழிவு அல்லது அதிக கொலஸ்ட்ரால் நிலையை அளிக்கும். இந்நிலைகள் தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ ஃபேட்டி லிவரை உருவாக்கும்.

உடற்பயிற்சி இன்மை, சில மருந்துகள் காரணமாகவோ, அதிவேகமான எடை குறைவு காரணமாகவோ கூட ஃபேட்டி லிவர் ஏற்படலாம். இருப்பினும், இதன் சதவிகிதம் மிகமிகக் குறைவே.

ஆரம்ப நிலைகளில் எவ்வித அறிகுறிகளும் கிட்டாத காரணத்தால், ஃபேட்டி லிவரை உணர்வது சிரமம். ஆரம்பநிலையில் மேற்கொள்ளப்படுகிற ரத்தப் பரிசோதனைகளில் எதுவும் தெரிய வராது. கல்லீரல் செயல்பாடு சார்ந்த சோதனை முடிவுகள் நார்மல் ஆகவே காட்டும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரல் என்சைம் அளவுகள் (SGOP/SGPT) மாறுவதை உணரலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஒரு நல்ல சோதனை. கல்லீரலில் எந்த அளவு (கிரேடு) கொழுப்பு படிந்திருக்கிறது என்பதையும் ரேடியாலஜிஸ்ட் மூலம் அளவிட்டுக் கூற முடியும்.

CT அல்லது MRI சோதனைகள் இன்னும் குறிப்பாக கல்லீரல் கொழுப்பைக் காட்டி விடும். ஆனாலும், பொதுவாக ஃபேட்டி லிவரை உறுதிப்படுத்த செலவுமிகுந்த இச்சோதனைகள் அவசியமல்ல.

லிவர் பயாப்சி -கல்லீரல் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் சோதனை இது. கல்லீரலின் மிகச்சிறு திசுவை ஆய்வு செய்வதே இச்சோதனை. லோக்கல் அனஸ் தீஷியா கொடுக்கப்பட்டு, மிக நுண்ணிய ஊசி கொண்டு கல்லீரல் திசு எடுக்கப்படும். அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பகுத்தாய்வு செய்யப்படும்.

மதுவை நிறுத்துவதே சிகிச்சையின் முதல் படி. இல்லையெனில் ஃபேட்டி லிவர், ஆல்கஹாலிக் ஹெபடைட்டிஸ்’ ஆக மாறி, எதிர்காலத்தில் சிரோசிஸ் என்கிற அபாயத்தில் கொண்டுபோய் விடும்.

மது சாராத ஃபேட்டி லிவர் பிரச்னையாக இருந்தால், அதற்கென பிரத்யேக சிகிச்சைகள் கிடையாது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமே இதைச் சரிசெய்ய முடியும். அளவுக்கு அதிக எடையை குறைத்தல், சுறுசுறுப்பான செயல்பாடுகளை அதிகரித்தல், நீரிழிவு இருந்தால் கட்டுக்குள் வைத்தல், கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் போன்றவை கல்லீரல் கொழுப்பையும் குறைக்கும்.

மது சார்ந்த நோய் வராமல் தடுக்க மது அருந்தாமல் இருப்பதே ஒரே வழி என அறிவோம். மது சாராத நோய் வராமல் தடுக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கிய எடையை அடைய வேண்டும். பாடி மாஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) அளவு 25ஐ ஒட்டியே இருக்க வேண்டும்.

தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி அவசியம். கொழுப்பு குறைவான ஹெல்த்தி உணவுகளை உட்கொள்ள வேண்டும். அரிசி, உருளைக்கிழங்கு போன்ற அதிக கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைக்க வேண்டும்.

துரித உணவுகளில் ஐங் ஃபுட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மது சாராத ஃபேட்டி லிவர் பிரச்னை நிச்சயமாக சரி செய்யக்கூடியதுதான். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment