LED Facts vis Health

Posted on 08-08-2018 , by: Raghuram Shankar , in , 0 Comments

அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்துமே 100% பாதுகாப்பானவை இல்லை .

உதாரணத்திற்கு நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான  Light Emitting Diode எனப்படும் LED தொழில்நுட்பத்தை எடுத்துக்கொள்வோம்.

இன்று வீடு, அலுவலகம், வணிக நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் LED விளக்குகளைத்தான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். தவிர Digital Device எனப்படும் நாம் பயன்படுத்துகிற மொபைல், லாப்டாப், ஐ பாட், கம்ப்யூட்டர் என எல்லாவற்றிலும் LED திரைதான் பயன்பாட்டில் உள்ளது.

சரி இந்த LEDயால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

LED விளக்குகள் Blue rays எனப்படும் நீல நிற கதிர்களை உமிழ்கின்றன. Ultra violet எனப்படும் புற ஊதாக்கதிர்களுக்கு அடுத்தபடியாக இந்த நீல கதிர்கள் நீண்டகால நோக்கில் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

(UV கதிர்களை போலவே நீல நிறக்கதிர்களையும் நாம் வெறுங்கண்ணால் காணவியலாது – Invisible rays) நீல நிற கதிர்கள் கண்களில் உள்ள ரெட்டினாவில் உள்ள செல்களை பாதிப்படையச்செய்து கண்புரை, விழித்திரை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இது நீண்டகால பயன்பாட்டில் ஏற்பட கூடிய பாதிப்பு. குறுகிய கால பாதிப்பாக நமக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது.

மொபைல் அல்லது லாப்டாப் டை இரவு நேரத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் தூக்கம் கெடும் என்பது உறுதி. நீங்கள் ஒரு நாவல் புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பியுங்கள் . கொஞ்ச நேரத்தில் தூக்கம் வர ஆரம்பித்துவிடும். அதே நாவலை லேப்டாப் அல்லது ஐ பாடில் படிக்கும்போது அந்த தூக்க உணர்வு நமக்கு ஏற்படாது.

சரி இதற்கு என்னதான் தீர்வு என யோசித்த அறிவியல் உலகம் Blue rays களை தடுப்பதற்காக கண்ணாடியில் Blue rays protect coating களை கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டுவரத் தொடங்கியுள்ளனர் . ஆனால் அதுவுமே கூட 100 சதவீத முழு பாதுகாப்பைத்தரும் என சொல்லமுடியாது.

பிறகு ஏன் இந்த LED தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்?

ஏனென்றால் இன்று நம்முடைய மின்சாரத்தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. பழைய விளக்குகளை பயன்படுத்தினால் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்யவியலாது. அவை மின்சாரத்தை அதிகளவில் விழுங்குபவை. LED விளக்குகள் மிகக்குறைந்த அளவே மின்சாரத்தை செலவிடும். மின்சார சிக்கனத்தை கருத்திற்கொண்டு LED பயன்பாட்டை நாம் தவிர்க்கமுடியாது.

தேவை Vs பாதிப்பு என்ற கோணத்தில் ஏற்படக்கூடிய எல்லா சாதக பாதகங்களையும் கருத்திற்கொண்டே எந்தவொரு தொழில்நுட்பமும் பயன்பாட்டுக்கு விடப்படுகின்றன.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment