நீர் அருந்தும் முறைகள் ( How To Drink Water )

Posted on 06-08-2018 , by: Raghuram Shankar , in , , 0 Comments

நீர் அருந்தும்  போதும் நினைவில் கொள்ளவேண்டியவை.

நிறைந்த அளவு நீர் அருந்துவது நமது கடமை. தாகம் எற்படும் போதெல்லாம் சிறிதும் அலட்சியப்டுத்தாமல் நீர் அருந்துவது அவசியம். நம் உடல்நலச்செழிப்புக்காக இயற்கைவிடுக்கும் அழைப்பிதழ்தான் தாகம்.

தினசரி இரண்டு லிட்டருக்கு குறையாமல் நீர் அருந்த வேண்டும்.
அதிகப்படலாமே ஒழிய குறையக் கூடாது.

காலையில் கண் விழித்தவுடன் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் நீர் அருந்துவது நல்லது. இதற்கு முதல் நாள் இரவு காய்ச்சி ஆறிய நீரை ஒரு செம்பு பாத்திரத்தில் மூடி வைத்து காலையில் அருந்துதல் வேண்டும். இந்நீரில் சிறிது துளசி இலைகளை போட்டு வைத்து நீருடன் அவ்விலைகளையும் நன்கு மென்று உண்ணுவது நல்லது.

எந்த நீராக இருப்பினும் கொதிக்க காய்ச்சி ஆற வைத்து அருந்துதல் வேண்டும்.

உணவு உண்டவுடன் தேவையான நீரை அருந்துங்கள்.

நீர் நமது தாகத்தைத் தணிக்கும் ஒரு திரவம் என்று மட்டும் கருத வேண்டாம். நீர் ஒரு வகை உணவு. பிணியைத் தீர்க்கும் மூலிகை.

நமது இரத்தக்குழாய்களிலும் தந்துகிளிலும் உணவுப் பாதைகளிலும் உள்ள அடைப்புகள் நாம் அருந்தும் நீரினால் நன்கு ஊறி மிக எளிதாகக் கரைந்து விடும்.

நின்ற நிலையில் நீர் அருந்த வேண்டாம். உட்கார்ந்து கொண்டு மும்முறை மூச்சுவிட்டு அருந்துங்கள். இதனால் தாகம் தணியும். ஜீரண சக்தியும் அதிகாகும்.

குளிர் பெட்டியில் வைத்து எடுத்த மிகுந்த குளிர்ந்த நீரை அருந்துவதை தவிருங்கள். வெது வெதுப்பான நீரை அருந்துதல் உடலுக்கு உகந்தது.

குளிர்ந்த நீர் அருந்த விரும்புவர்கள் காய்ச்சி வடிகட்டிய நீரை மண்பானையில் ஊற்றி வைத்து அது குளிர்ந்தவுடன் அருந்தலாம்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment