நல்லெண்ணெய் ( Gingelly Oil )

Posted on 23-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , , 0 Comments

மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்லெண்ணெய் –

ஆரோக்யம் நிரம்பி வழிவது நல்லெண்ணையில் தான் என்பது எல்லாருக்கும் தெரியுமா ? நல்லெண்ணையில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக, அதிலுள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் நம்முடைய உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. நல்லெண்ணையால் நம்முடைய மன அழுத்தத்தை முற்றிலும் குறைத்துவிட முடியும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பல மருத்துவப் பரிசோதனைகளைக் கடந்து, நல்லெண்ணை சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்டுகளால் உயர் மன அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டிருக்கிறது. உயர் அழுத்தம் மட்டுமல்லாமல் நீரிழிவு நோயின் தன்மையைக் குறைப்பதிலும் நல்லெண்ணை முக்கியப் பங்காற்றுகிறது.

நல்லெண்ணையை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் ஆகியவை வராமல் தடுக்கமுடியும் என பிரேசிலில் உள்ள ஃபெடரல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சாதாரண ரீபைண்ட் எண்ணெயைப் பயன்படுத்தும் போது உள்ள இரத்த அழுத்த நிலையும் எள் உணவுகள் சாப்பிடத் தொடங்கியதும் உள்ள ரத்த அழுத்த நிலையும் கணக்கிடப்பட்டது. அதில், எள் உணவுகள் சாப்பிடத் தொடங்கியவுடன் அவர்களின் ரத்த அழுத்த நிலை குறைந்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக நல்லெண்ணைணை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதயம் மற்றும் பெருந்தமனிகளில் உண்டாகும் பாதிப்புகள் வெகு கணிசமாகக் குறைந்திருந்தன என்று தெரிவித்தார்.

மன அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது மேலும் பல சுகாதாரக் கேடுகளை உண்டாக்கிவிடும். அதனால் மன அழுத்தத்தை முதலில் குறைத்தாலே மற்ற நோய்களிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம்.

எள் சம்பந்தப்பட்ட உணவுகள் மற்றும் நல்லெண்ணை பக்கவிளைவுகள் ஏதும் இல்லாதது. நல்லெண்ணையை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment