தூய பற்கள் ( For Clean Sparkling Teeth )

Posted on 21-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , 0 Comments

ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் –

ஒளிரும் பற்கள் தான் முத்து சிரிப்பிற்கு அழகு. அந்த சிரிப்பு தான் நமது முகத்திற்கு அழகு,ஆனால் இத்தகைய புண்ணகையை சீரழிப்பது தான் இந்த பற்களில் உண்டாகும் பிரச்சனைகள், பற்களில் உண்டாகும் பிரச்சனைகளானது உங்களது அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் சீரழிக்க கூடியதாகும்.

பற்களில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும். இதனால் பற்களில் உள்ள கோளாறுகளை சரி செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் சில வகையான இயற்கையான பொருட்களை சாப்பிடுவதன் மூலமாகவும், சில இயற்கை பொருட்களை கொண்டும் உங்களது பற்களில் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இந்த பகுதியில் பற்களில் உண்டாகும் பல விதமான பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பது பற்றி காணலாம்.

ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் உங்களது வாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும். இதனால் உங்களது சிரிப்பு முத்துக்களில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் போல இருக்கும்.

பெப்பர் மிண்ட் ஆயில் கடுமையாக உள்ள ஈறு பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க வல்லது. இது தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது. இந்த பெப்பர் மிண்ட் ஆயில் நல்ல வாசனை உடையது எனவே இது உங்களது வாய் துர்நாற்றத்தையும் போக்க கூடியது.

சில துளிகள் பெப்பர் மிண்ட் ஆயிலை எடுத்து ஈறுகளில் தடவினால், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

இலவங்கப்பட்டை பொடியில் அதிகளவு ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது பற்களில் உண்டாகும் கரைகளை போக்க கூடியது. மேலும் இது பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து விடுவதால், உங்களுக்கு சொத்தை பல் பிரச்சனை இருக்காது. மேலும் இது உங்களது சுவாசத்தையும் சுத்தமாக்குகிறது.

இலவங்கப்பட்டையின் பொடியை சிறதளவு எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.

பால் பொருட்களில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. கால்சியம் உங்களது ஈறுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நீக்க கூடியது. மேலும் இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. தினமும் பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இந்த ஆயில் புல்லிங் செய்வதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. இந்த ஆயில் புல்லிங் செய்யும் போது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிகின்றன. உங்களது ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை போக்க இது உதவுகிறது.

அரை டீஸ்பூன் அளவு சிசேம் ஆயில், தேங்காய் எண்ணெய், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் நன்றாக வாய்கொப்பளித்து துப்பி விட வேண்டும். இதனை தினமும் காலையில் பல்துலக்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும்.

கேரட்டை நீங்கள் பச்சையாக சாப்பிடுவது உங்களது வாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வாக அமையும். கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைகின்றன. கேரட் உங்கள் வாய்துற்நாற்றம், பற்களில் சொத்தை விழுதல், பற்களில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும் கேரடை மென்று சாப்பிடுவதால் உங்களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

அன்னாசி பழமும் கூட பற்கள் பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் உங்களது பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். நீங்கள் உணவுக்கு முன் இது போன்று பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் உங்களது பற்களின் ஆரோக்கியம் நீடிக்கும். மேலும் நீங்கள் தக்காளி பழத்தையும் சாப்பிடலாம்.

நீங்கள் கடுமையான பிரஸை உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான பிரஸ்கள் உங்களது பற்களை எளிதில் சேதப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் பற்களை வேகவேகமாக அழுத்தி தேய்ப்பதும் கூடாது.

புதினா இலையை காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment