முடவாட்டுகிழங்கு ( Drynaria Quercifolia )

Posted on 07-08-2018 , by: Raghuram Shankar , in , , , 1 Comments

முடவாட்டுகிழங்கு.

முழங்கால் மூட்டு வலி & எலும்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.

Drynaria quercifolia

“ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு (அ) வாதவள்ளி கிழங்கு / முசுமுசு கழங்கு / சரவாங்கி கிழங்கு

கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலைமருந்தியால் பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்னை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம் இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்.

காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை ஆகாயராஜன் எனவும்,முடவாட்டுகால் கிழங்கு என்றும் கூறியுள்ளார் முடம் நீக்கும் கிழங்கு மருவி முடவாட்டுக்கால் கிழங்கு ஆனது.

வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements.

உடல் புத்துணர்ச்சி என்பது மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை அறிவோம் இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது உடல்,மனம்,புத்தி,அகியவை புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வு முடவாட்டுகால் கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றன .

ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும் அதனால் தாம்மத்தியம் நீண்ட நேரம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.தேவையெனில்  முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.பின்னர் ஆட்டுக்கால் சூப் வைப்பது போல் செய்யவும்.

இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

1 Comments found

  1. Need this product ” aaru kaal khizhangu”.

Leave a comment