மிளகாய்ப் பூண்டு ( CROTON SPARSIFLORUS )

Posted on 13-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

‎மிளகாய்ப் பூண்டு –

தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எல்லா மண் வளத்திலும் வளரக்கூடியது. மிளகாய் இலை வடிவில் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், நீள் குச்சியில் இருமருங்கும் வெண்ணிறப் பூக்களையும், ஆமணக்குக் காய் வடிவில் சிறு காய்களையும், உடைய மிகச்சிறு செடி. 2 அடி உயரம் வரை குட்டாக வளரும். இதை எலி ஆமணக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் –

மிளகாய்ப் பூண்டு மலமிளக்கியகவும் உடல் தாதுக்களை அழுகாது தடுக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இதன் இலையைக் கீரை போல் வதக்கிச் சோற்றில் பிசைந்து சாப்பிட மலர்ச்சிக்கல் தீரும்.

இதன் இலையைக் குடிநீர் 3, 4 வேளை 1 முடக்கு வீதம் குடித்து வரக் கட்டிகள் கரையும். கை, கால் இடுக்குகளில் நெறி கட்டிய சுரம் தீரும்.

40 கிராம் வேரை 250 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி தினம் 2 துளி சர்கரையில் காலை, மாலை சாப்பிட்டு வரப் பாரிச வாயு, பக்கச் சூலை, இழுப்பு, இளம்பிள்ளை வாதம், முக வாதம் ஆகியவை தீரும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

 

Leave a comment