வல்லாரை கீரை ( Centella )

Posted on 06-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , 0 Comments

மருத்துவகுணம் நிறைந்த வல்லாரை கீரை.

வல்லாரை உண்பதும் நன்று, நல்லாரை காண்பதும் நன்று என்ற முதுமொழிக்கு ஏற்ப சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்ததிற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலுள்ளது.

வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிபடுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால், வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்துவிடும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும். தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும்.

படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும்.

உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். இந்தக் கீரையை சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால், வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

இக்கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி, தைலமாக தலையில் தேய்த்து வந்தால், உடல் உஷ்ணம் மற்றும் உடல் எரிச்சல் குறையும். மேலும், வல்லாரைக் கீரையை, சம அளவு வெந்தயத்துடன் சேர்த்து, சிறிதளவு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில், 10 கிராம் சாப்பிட்டால், உடல் சூடு, கண் எரிச்சல் மற்றும் தலைவலி மட்டுப்படும்.

வல்லாரை கீரை, துளசி, மிளகு மற்றும் சீரகம் சம அளவு எடுத்து, மைய அரைத்து, மிளகு அளவிற்கு உருட்டி, அதை நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இருமல், சளி, நீர்கடுப்பு, தோலில் அரிப்பு போன்றவற்றிற்கு இதை, மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும்.

வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும்.

இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.

இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது.

இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நம்மை நெருங்காது.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment