உடல் சூடு ( Body Heat )

Posted on 07-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

உடல்சூட்டை சில நிமிடத்தில் குறைக்கலாம்.

சிலரது உடல் இயற்கையாகவே சூடாகும், அதிலும் ஏசியில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு இன்னும் அதிகமாகும்.

கண்களில் எரிச்சல் உண்டாகும். இதனால் தலை முதல் கால் வரை உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.

இதனால் முகப்பரு, தோல் நோய்கள், வயிற்று வலி, தலை முடி உதிர்தல், எடை குறைதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உடல் சூட்டை தணிக்க சித்தர்கள் எளிய வழிமுறைகள் கூறியுள்ளனர். இதனை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய், பூண்டு, மிளகு,

செய்முறை :

நல்லெண்ணெய்யை ஒரு குழிக்கரண்டியில் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடவும்.

எண்ணெய்யை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசிவிடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து காலை கழுவி விடவேண்டும்.

இதனை செய்து கொண்டிருக்கும்போதே உடல் தானாக குளிர்ச்சியடைந்து விடும்.

அதே நேரத்தில் 2 நிமிடத்திற்கு மேல் எண்ணெய்யை வைத்திருக்கக்கூடாது.

முக்கியமானது சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மனஅழுத்தம், உஷ்ணம் உள்ளவர்கள் கட்டாயம் இதனை செய்யலாம்.

பெரியவர்கள் தினமும் இரண்டு நிமிடங்கள் செய்து வரலாம்.

சிறியவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தாலே போதுமானது.

தொலை தூரம் பயணம் செய்தவர்கள், ஏசியில் அமர்ந்து வேலை பார்த்தவர்கள் இதனை செய்து பயன்பெறலாம்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment