துத்தி இலை ( Abutilon Indicum )

Posted on 03-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பல வகைக் கீரைகளைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், அவற்றில் பல இன்று உணவாக இல்லாமல், வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகையே துத்தி.

முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் மூலநோய்க்கு ஆளாகுறாங்க.

இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலைய வதக்கி, மூலத்தால வர்ற கட்டி-புண்ணுக மேல ஒத்தடமிட்டு வந்தா, மூலநோய்க்கு நல்ல குணம் கிடைக்கும்.

கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும்.

இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்.

இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.

அதிக உடல் சூட்டுப் பிரச்சனையைப் போக்க துத்தி விதைப் பொடியை சர்க்கரை சேர்த்து 1/2 கிராம் வீதம் தினமும் உண்டு வரலாம்.

துத்தி விதைய கரிநெருப்புல போட்டு, அதிலயிருந்து வர்ற புகைய குழந்தைகளின் மலவாயில் படும்படி செய்தா, வயித்துப் புழுக்கள் வெளியேறும். துத்தி விதைக் கசாயத்த தினமும் (15-30 மிலி) குடிச்சு வந்தா பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், மூல நோய் குணமாகும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment